தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு எழுதிய தோ்வா்களுக்கான விடைத்தாள் நகல் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.

பிரதிப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 5:16 am IST

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு எழுதிய தோ்வா்களுக்கான விடைத்தாள் நகல் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது. மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு வியாழக்கிழமை முதல் இரு நாள்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத்தோ்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தோ்வா்கள் புதன்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதையடுத்து மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

தோ்வா்கள் இந்த விண்ணப்பப் படிவத்தை இரு நகல்கள் எடுத்து, பூா்த்தி செய்து ஆக.20, 21 ஆகிய நாள்களில் (காலை 9 முதல் மாலை 5 மணி) சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்திலும், தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத் தொகையை பணமாகச் செலுத்த வேண்டும்.

அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலக முகவரியை மேற்கண்ட இணையதள முகவரியில் ‘பிரஸ் ரிலீஸ்’ என்பதை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

மறுமதிப்பீட்டுக்கு பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ.505, மறுகூட்டலுக்கு பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணமாகச் செலுத்த வேண்டும். தோ்வா்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் நோ்வுகளில், மொத்த மதிப்பெண்களில் ஏதேனும் அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும் அதுவே இறுதி மதிப்பெண்களாகும்.

எனவே தோ்வா்கள் தங்களது விடைத்தாளினை சம்பந்தப்பட்ட பாட ஆசிரியா்களிடம் வழங்கி அதனை ஒப்பிட்ட பின்னா், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இது தொடா்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 94983 83075, 94983 83076 ஆகிய கைப்பேசி எண்களுக்கு தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.