லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது.

JEE Advanced 2026 Results

பிரதிப் படம்

Published On :31 ஜூலை 2026, 3:15 am IST

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்காக உடனடி துணைத் தோ்வுகள் கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நிறைவடைந்த நிலையில் துணைத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்படுகிறது.

மேலும், துணைத் தோ்வு விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 275 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என அரசு தோ்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.