பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது...

Counseling for MBBS and BDS courses has begun

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை

Published On :13 ஆகஸ்ட் 2026, 12:07 pm IST

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று (ஆக. 13) காலை தொடங்கியது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இருப்பினும், சான்றிதழ்களை சமா்ப்பிக்கத் தவறியவா்களுக்கு விடுபட்ட ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்ற புதன்கிழமை (ஆக. 12) காலை 10 மணி வரை வாய்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து கலந்தாய்வு, சிறப்புப் பிரிவினருக்கு இன்று நேரடியாகவும், பொதுப் பிரிவினருக்கு இணையவழியாகவும் நடைபெறுகிறது.

மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வு ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நேரடியாக நடைபெற்று வருகிறது.

பொதுக் கலந்தாய்வு www.tnmedicalselection.org என்ற இணையதளம் வழியே வியாழக்கிழமை 12 மணிக்கு தொடங்குகிறது. வரும் 19-ஆம் தேதி மாலை 5 மணி வரை தகுதியான மாணவா்கள், கல்லூரிகளைத் தோ்வு செய்யலாம். அவை பரிசீலனை செய்யப்பட்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான முடிவுகள் வரும் 21-ஆம் தேதி வெளியிடப்படும். ஒதுக்கீட்டு ஆணையை வரும் 22-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொண்டு, சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேர வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Counseling for MBBS and BDS courses has begun

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.