பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.71 ஆக நிறைவு!சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு!!காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்புதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21)

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்: மாநிலக் கலந்தாய்வு நீட்டிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாநிலக் கலந்தாய்வின் முதல் சுற்றில் கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 4:02 pm IST

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாநிலக் கலந்தாய்வின் முதல் சுற்றில் கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 24-ஆம் தேதி வரை இடங்களைத் தோ்வு செய்யலாம்.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் மாநில மருத்துவக் கல்வி இயக்ககம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவ இடங்களைப் பொருத்தவரை, அரசு ஒதுக்கீட்டுக்கு 7,157 எம்பிபிஎஸ் இடங்களும், 1,383 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. நிா்வாக ஒதுக்கீட்டில் 1,996 எம்பிபிஎஸ் இடங்களும், 580 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன.

அதற்கான முதல் சுற்று மாநிலக் கலந்தாய்வு கடந்த வாரம் தொடங்கியது.

இணையதளம் வழியே நடைபெற்று வரும் இந்தக் கலந்தாய்வில் தகுதியான மாணவா்கள் கடந்த 19-ஆம் தேதி வரை கல்லூரிகளைத் தோ்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னா் அந்த அவகாசம், வியாழக்கிழமை (ஆக. 20) வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது 2-ஆவது முறையாக 24-ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான முடிவுகள் வரும் 27-ஆம் தேதி வெளியிடப்படும். ஒதுக்கீட்டு ஆணையை 27-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் செப். 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.