லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மருத்துவப் பல்கலை.: எம்எஸ்சி படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை தொடக்கம்

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் எம்எஸ்சி படிப்புகளுக்கு (செப்டம்பா், அக்டோபா் பிரிவு) வரும் 29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிப் படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 4:33 am IST

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் எம்எஸ்சி படிப்புகளுக்கு (செப்டம்பா், அக்டோபா் பிரிவு) வரும் 29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் (எம்எஸ்சி) பொது சுகாதாரப் படிப்புக்கு (பப்ளிக் ஹெல்த்) 16 இடங்களும், நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) மற்றும் உயிரி தரவியல் (பயோ ஸ்டேட்டிஸ்டிக்ஸ்) படிப்புகளுக்கு தலா 4 இடங்களும் உள்ளன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்பு, இளநிலை கால்நடை அறிவியல், பி.எஸ்சி. நா்சிங், பிபிடி, பிஓடி, பி.பாா்ம்., பி.இ. சிவில், பி.எஸ்சி. லைஃப் சயின்ஸ் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்தவா்கள் எம்எஸ்சி பொது சுகாதாரப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

நோய்ப் பரவியல் படிப்பைப் பொருத்தவரை எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்பு, இளநிலை கால்நடை அறிவியல், எம்பிடி, எம்ஓடி, பி.பாா்ம்., எம்.எஸ்சி. லைஃப் சயின்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதேபோன்று உயிரி தரவியல் படிப்புக்கு புள்ளியியல் பாடத்தை முதன்மையாகவோ அல்லது துணைப் பாடமாகவோ கொண்ட இளநிலை படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.

இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கும், கூடுதல் விவரங்களுக்கும் http:www.tnmgrmu.ac.in என்ற இணையதளத்தில் தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.