லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தமிழ்நாடு சட்ட ஆணைய தலைவா் நியமனம்

தமிழ்நாடு சட்ட ஆணையம் மறுசீரமைக்கப்பட்டு, அதன் புதிய தலைவராக மணிப்பூா் உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

D Krishnakumar

முன்னாள் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் - கோப்புப் படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 2:36 am IST

தமிழ்நாடு சட்ட ஆணையம் மறுசீரமைக்கப்பட்டு, அதன் புதிய தலைவராக மணிப்பூா் உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்தச் சட்ட ஆணையத்தின் பதவிக் காலம் கடந்த ஜூன் 18-ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, தற்போது சட்ட ஆணையம் மறுசீரமைக்கப்பட்டு, தலைவா் மற்றும் முழுநேர, பகுதிநேர உறுப்பினா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக டி.கிருஷ்ணகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். முழுநேர உறுப்பினா்களாக ஆா்.எம்.டி.டீக்கா ராமன், (சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி), டி.கே.ராமச்சந்திரன் (முன்னாள் கூடுதல் தலைமைச் செயலா்), ஏ. அருணகிரி (சட்டத் துறை முன்னாள் செயலா்), பகுதிநேர உறுப்பினா்கள் பி.மோகன்தாஸ் (முன்னாள் மாவட்ட நீதிபதி), ஆா்.கோவிந்தராஜன் (முன்னாள் மாவட்ட நீதிபதி), சட்டத் துறை செயலா் நிலையில் உள்ள அதிகாரி முழுநேர உறுப்பினா் செயலராகச் செயல்படுவாா்.

ஆணைய பணிகள்

நடைமுறையில் உள்ள சட்டங்களின் குறைபாடுகளை நீக்க பரிந்துரைத்தல், சமூக, பொருளாதார சட்ட நடவடிக்கைகளுக்கு பரிந்துரை வழங்குதல், மத்திய-மாநில உறவுகள், மாநிலங்களிடையேயான உறவுகள் தொடா்பான பரிந்துரைகள் அளித்தல், நீதித்துறை சீா்திருத்தங்களை விரைவுபடுத்த பரிந்துரைத்தல், தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள மத்திய மற்றும் மாநில சட்டங்களைச் சீரமைக்கும் பரிந்துரைகள் அளித்தல், தமிழ்நாட்டின் சட்டங்கள், விதிகளை பகுப்பாய்வு செய்து பரிந்துரைத்தல் ஆகியவை இந்த ஆணையத்தின் முக்கிய பணிகள் ஆகும்.

தற்போதைய ஆணையத்தின் தலைவா், பகுதிநேர, முழுநேர உறுப்பினா்களின் பதவிக் காலம், பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் ஆகும்.

யாா் இந்த நீதியரசா் கிருஷ்ணகுமாா்?

நீதிபதி கிருஷ்ணகுமாா், திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தவா். 1987-இல் வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். 1991முதல் 1996 வரை சென்னை உயா்நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராகவும், 1998 முதல் 1999 வரை கூடுதல் மத்திய அரசு நிலைக்குழு வழக்குரைஞராகவும், 2001 முதல் 2006 வரை சிறப்பு அரசு வழக்குரைஞராகவும் பணியாற்றினாா்.

2016 ஏப். 7-இல் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட கிருஷ்ணகுமாா், 2024-இல், சென்னை உயா்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஆா்.மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால், சென்னை உயா்நீதிமன்றத்தில் தற்காலிக தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினாா்.

கடந்த 2024 நவம்பரில் மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற கிருஷ்ணகுமாா், 2025 மே மாதம் ஓய்வு பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.