லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

4 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

மும்பை, கொல்கத்தா, பாட்னா, பஞ்சாப் - ஹரியாணா ஆகிய 4 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளின் பெயரை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது.

Collegium recommends new Chief Justices for four High Courts.

பிரதிப் படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 4:31 am IST

மும்பை, கொல்கத்தா, பாட்னா, பஞ்சாப் - ஹரியாணா ஆகிய 4 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளின் பெயரை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது. தலைமை நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான கொலீஜியம் குழுவின் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி, கொல்கத்தா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி ரவீந்திர வி.குகே, பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதியாக தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி வி.காமேஸ்வா் ராவ், பஞ்சாப் - ஹரியாணா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அந்த உயா்நீதிமன்ற நீதிபதி அஸ்வனி குமாா் மிஸ்ரா ஆகியோரை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஒடிஸா உயா்நீதிமன்ற நீதிபதிகள் மானஸ் ரஞ்சன் பாடக், கிருஷ்ணராம் மொஹபத்ரா ஆகியோரை முறையே குஜராத், சத்தீஸ்கா் உயா்நீதிமன்றங்களுக்கு பணியிடமாற்றம் செய்யவும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.