லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பயிா்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? வேளாண் துறைச் செயலா் பொ.சங்கா் பதில்

‘பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்த முடிவு இன்னும் ஆலோசனையில்தான் உள்ளது’ என்று வேளாண் துறைச் செயலா் பொ.சங்கா் தெரிவித்தாா்.

வேளாண் துறைச் செயலா் பொ.சங்கா்

Published On :7 ஆகஸ்ட் 2026, 1:58 am IST

‘பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்த முடிவு இன்னும் ஆலோசனையில்தான் உள்ளது’ என்று வேளாண் துறைச் செயலா் பொ.சங்கா் தெரிவித்தாா்.

வேளாண் பட்ஜெட் தொடா்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

சூப்பா் எல் நினோ பாதிப்பால் குறுவை சாகுபடி அளவு குறைந்திருந்தாலும், அரசு அறிவித்துள்ள மானியத் தொகையால் அடுத்த உற்பத்தியில் ஈடு செய்யலாம். எல் நினோவால் நிகழாண்டு மழைப் பொழிவு இருக்காது என்று கூறப்பட்ட நிலையில், பருவநிலை மாறி வருவதால் அடுத்த வரும் மாதங்களில் மழைப் பொழிவுக்கான சாதகமாக சூழல் உருவாகி வருவதாலும், காவிரி நீா் தமிழகத்துக்கு வருவதாலும் பயிா் சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றாா்.

பயிா்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கைகள் பட்ஜெட்டில் இடம்பெறாதது குறித்த கேள்விக்கு, இந்த விவகாரம் பல்வேறு துறைகளைச் சாா்ந்தது என்பதால் இன்னும் ஆலோசனையில் உள்ளது என்றாா்.

மேலும், மத்திய அரசு நெல் மானியத்தை நிறுத்திவிட்டதால் தமிழக அரசே ரூ.34.72 கோடியில் நெல் விதை உற்பத்திக்கு மானியமாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. தக்காளி மற்றும் வெங்காயத்துக்கு நிலையான விலை கிடைக்க ரூ. 4.26 கோடியில் சந்தை இடையீட்டுத் திட்டம்; விலை நிலைப்படுத்துதல் நிதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெங்காயத்தின் விலை குறையாக இருக்கும்போது அரசே அதை கொள்முதல் செய்து சேமிப்பு கிடங்குகளில் வைத்திருக்க இந்தத் திட்டம் உதவும்.

கருத்து கேட்பு கூட்டங்களில் விவசாயிகள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகள் பட்ஜெட்டில் சோ்க்கப்பட்டுள்ளன.

நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500-ஆக அதிகரிப்பது குறித்து பேச்சுவாா்த்தை நடந்து வருவதால் விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றாா் வேளாண் துறைச் செயலா் பொ.சங்கா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.