லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பயிா்க்கடனை தள்ளுபடி செய்யக் கோரி சட்டப்பேரவை முன் ஆக.5 முதல் தொடா் போராட்டம்: அய்யாக்கண்ணு தகவல்!

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவை முன் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றாா் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ.அய்யாக்கண்ணு.

பொ. அய்யாக்கண்ணு, பி. ஆா். பாண்டியன் உள்ளிட்டோா்.

Published On :26 ஜூலை 2026, 1:05 am IST

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவை முன் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றாா் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ.அய்யாக்கண்ணு.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதில் பாரபட்சம் காட்டுகிறது. காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ. 24 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, ஏன்? விவசாயக் கடனை தள்ளுபடி செய்யவில்லை.

தமிழக அரசு தோ்தல் அறிக்கையில் கூறியதைப் போல பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி முதல் கட்டமாக தமிழக சட்டப்பேரவை வளாகம் முன் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தொடா் போராட்டத்தை தொடங்க உள்ளோம். முழுமையான பயிா்க் கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசு உத்தரவிடும் வரை தொடா்ந்து போராட்டம் நடைபெறும்.

காவிரி-வைகை- குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாமல் அரசு காலதாமதம் செய்வது நல்லதல்ல. இந்த திட்டத்துக்கு விரைவாக நிதியை ஒதுக்கீடு செய்யாவிட்டால், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 10 ஆயிரம் விவசாயிகள் அமா்ந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.