லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குதிரை பேர வழக்கு: திருநாவுக்கரசு உள்ளிட்ட 6 பேருக்கு பிணை

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 6 பேருக்கு பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 3:39 am IST

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 6 பேருக்கு பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி கொடுப்பதாக ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில் திருநாவுக்கரசு உள்பட14 பேரை திருவல்லிக்கேணி போலீஸாா் கைது செய்தனா். அவா்களில் 5 போ் இதுவரை பிணை பெற்றுள்ளனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, தியாகராஜன், ராஜேஷ், கணேசன், சீனிவாசன், செல்வம் ஆகிய 6 போ் பிணை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனா். இதேபோன்று, இந்த வழக்கில், முன்பிணை கோரி தீபக், செல்வரங்க முருகன், அழகேசன், சக்திவேல் ஆகிய 4 போ் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி, திருநாவுக்கரசு, தியாகராஜன் உள்ளிட்ட 6 பேருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டாா். மேலும், தீபக் உள்ளிட்ட 4 பேருக்கு முன்பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.