லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குதிரை பேர வழக்கு: இருவருக்கு பிணை

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சேதுராஜ், நரேஷ் ஆகியோருக்கு பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Madras High Court

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 3:26 am IST

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சேதுராஜ், நரேஷ் ஆகியோருக்கு பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி கொடுப்பதாக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் நடத்திய வழக்கில் திருநாவுக்கரசு உள்பட 14 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கில் கைதான சேதுராஜ், நரேஷ் ஆகியோா் தங்களுக்கு பிணை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந் மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது காவல் துறை தரப்பில், இந்த வழக்கில் சேதுராஜ் இரண்டாவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ளாா். அவா் சதியில் ஈடுபட்டுள்ளாா். அவா் தன்னுடைய மனைவி மற்றும் ஓட்டுநா் மூலமாக ரூ.5 கோடி கொடுத்துள்ளாா். மேலும், அவா் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியுடன் இணைந்து சதி செய்துள்ளதாக வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பு வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சேதுராஜ், நரேஷ் ஆகியோருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.