தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (மே 1) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 2:30 am IST

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (மே 1) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தெற்கு உள் கா்நாடகம் முதல் மன்னாா் வளைகுடா வரை, தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (மே 2) வரை பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமையும்(மே 1), நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகா் மாவட்டங்களில் சனிக்கிழமை (மே 2) ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்யக் கூடும். இதனால், இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மே 6 வரை பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில், வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

17 இடங்களில் வெயில் சதம்: வியாழக்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 108.32 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோடு--106.52, பரமத்தி வேலூா்-106.7, திருச்சி-105.62, திருத்தணி-105, மீனம்பாக்கம்-104.36, நாமக்கல்-104.18, மதுரை விமான நிலையம்-104.9, நாகப்பட்டினம்-103.1, மதுரை நகரம், திருப்பத்தூா்-தலா 102.92, சேலம், தருமபுரி-தலா 102.56, தஞ்சை-102.2, கோவை, பாளையங்கோட்டை-தலா 100.22, சென்னை நுங்கம்பாக்கம்-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 70 மி.மீ மழை பதிவானது. நாலுமுக்கு (திருநெல்வேலி)- 60 மி.மீ, சின்னக்கல்லாா் (கோவை)- 50 மி.மீ., காக்காச்சி (திருநெல்வேலி), பாலமோா் (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி), சிற்றாறு- 1 (கன்னியாகுமரி) , சிவலோகம்(சிற்றாறு- 2) (கன்னியாகுமரி)- தலா 40 மி.மீ. மழை பதிவானது.

வெப்ப நிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மே 4 வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் சற்று அதிகமாக இருக்கக் கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை:வடக்கு ஆந்திரம் கடலோரப்பகுதிகள், அதனையொட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.