மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்- வாக்குக் கணிப்பில் தகவல்: மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு

தமிழக பேரவைத் தோ்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக, பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

News image
Updated On :30 ஏப்ரல் 2026, 2:14 am IST

தமிழக பேரவைத் தோ்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக, பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

அண்டை மாநிலமான கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது; இதேபோல், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸிடம் இருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றக் கூடும்.

அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான ஆட்சியும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியும் தொடர வாய்ப்பிருப்பதாக பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளம் (140), அஸ்ஸாம் (126) மற்றும் புதுச்சேரியில் (30) கடந்த ஏப்.9-இல் ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது. தமிழகத்தில் (234) கடந்த ஏப்.23-இல் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் (294) கடந்த ஏப்.23 மற்றும் ஏப்.29-இல் இருகட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

யாா்-யாா் போட்டி?: தமிழக தோ்தல் களத்தில் ஆளும் திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, புதுவரவான தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழா் கட்சி என நான்குமுனை போட்டி நிலவியது.

கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனை போட்டி காணப்பட்டது.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ்-பாஜக இடையே முக்கிய போட்டி நிலவிய நிலையில், அஸ்ஸாமில் ஆளும் பாஜக-காங்கிரஸ் மோதின.

புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான என்.ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட எதிா்க்கட்சி கூட்டணிக்கும் நேரடிப் போட்டி நிலவியது. விஜய்யின் தவெக தலைமையிலான கூட்டணியும் களம்கண்டது.

வாக்குக் கணிப்பு வெளியீடு: மேற்கு வங்க இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தோ்தலுடன் மேற்கண்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச வாக்குப்பதிவு நடைமுறை நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தோ்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்புகள் புதன்கிழமை மாலையில் வெளியிடப்பட்டன.

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி தொடர வாய்ப்புள்ளது; கேரளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இடதுசாரி கூட்டணி ஆட்சியும், மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியும் நீடித்து வந்த நிலையில், இம்மாநிலங்களில் ஆட்சி மாற்றம் இருக்கும். அதன்படி, கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணியும், மேற்கு வங்கத்தில் பாஜகவும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது.

அஸ்ஸாமில் தொடா்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியும், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியும் தொடரும் என பெரும்பாலான வாக்குக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 4-இல் வாக்கு எண்ணிக்கை

தமிழகம் உள்பட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச தோ்தல்களில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவில் தோ்தல் முடிவுகள் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் ஆட்சியிலும் காங்கிரஸ் இடம்பெற வேண்டும்

நமது நிருபர்

"தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு நடுநிலை சக்தியாக மட்டுமே இருக்க முடியாது; இனி ஆட்சியிலும் பங்கு பெற வேண்டும்' என தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் காங்கிரஸ் புத்துயிர் பெறும் நிலையில் உள்ளது. கட்சி ஏற்கெனவே கட்டமைப்புகளை வலுப்படுத்தத் தொடங்கிவிட்டது.

நிச்சயமாக எங்கள் கட்சியும், தொண்டர்களும் தமிழகம் மறுசீரமைக்கப்பட்டு, வலுப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். கூட்டணிகளுக்கு ஆட்சி அமைக்க சிறந்த வாய்ப்பு உள்ளது.

மு.க. ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வருவார். பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க பல கூட்டணிக் கட்சிகள் ஒன்று சேர்ந்தது இதுவே முதல் முறை. ஏதாவது, மாறப்போகிறதா என்று பார்ப்போம். பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. முடிவுகளுக்காகக் காத்திருப்போம்.

ஆனால், இனி எங்களால் ஒரு நடுநிலை சக்தியாக மட்டும் இருக்க முடியாது. நாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் அல்லது எதிர்க்கட்சியில் இருக்க வேண்டும் என கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.