மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றுவதாக பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

News image

மு.க. ஸ்டாலின் - file photo

Updated On :29 ஏப்ரல் 2026, 8:20 pm IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு பெற்று மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவிருக்கும் நிலையில், இன்று வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளன.

தவெகவின் வருகையால் கணிக்கவே முடியாத நிலையில் இருக்கும் தமிழ்நாட்டில் ஒரு சில நிறுவன கருத்துக் கணிப்புகளைத் தவிர்த்து பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளன.

பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதாகக் கூறியிருக்கிறது.

மேட்ரிஸ், என்டிடிவி - பீப்பிள்ஸ் பல்ஸ், ரிபப்ளிக் - பி மார்க், பீப்பிள்ஸ் இன்சைட்ஸ் ஆகிய கருத்துக் கணிப்புகள் தமிழகத்தில் திமுக கூட்டணி 120 முதல் 145 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிஸ் மை இந்தியாவோ, தவெக 98 - 120 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கலாம் என்றும், சிஎன்என்-நியூஸ் 18 மற்றும் ஜேவிசி - டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்புகள் அதிமுக தலைமையிலான கூட்டணி 114 - 147 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கிறது என்றும் கூறியிருக்கிறது.

உண்மையான நிலவரம் என்ன? மக்கள் அதிகாரத்தை யாருக்கு அளித்திருக்கிறார்கள்? தமிழ்நாட்டின் அதிகாரம் யாருக்கு? என்பதை மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை உறுதி செய்யும்.

Summary

DMK rule again in Tamil Nadu? Exit poll results!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.