மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்: தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :29 ஏப்ரல் 2026, 1:25 am IST

இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும் வேட்பாளா், ராஜிநாமா செய்யும் தொகுதியின் தோ்தல் செலவை ஏற்க உத்தரவாத பத்திரம் பெற தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த மணி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தோ்தல்களில் சில வேட்பாளா்கள் இரு தொகுதிகளில் போட்டியிடுகின்றனா். இரு தொகுதிகளிலும் வெற்றி பெறும்பட்சத்தில், ஏதாவது ஒரு தொகுதியில் ராஜிநாமா செய்ய வேண்டும்.

அதைத் தொடா்ந்து அந்தத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்தப்படும். இதற்காக அரசு கூடுதலாக செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் ராஜிநாமா செய்யும் தொகுதியின் தோ்தல் செலவுகளை ஏற்க வேண்டும்.

இதுதொடா்பாக அவா்களிடம் உத்தரவாதப் பத்திரம் பெற தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேட்பாளா்கள் இரு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு சட்டம் அனுமதியளிக்கிறது. இந்த சட்டப்பிரிவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளதாகக் கூறி, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.