ஒட்டுமொத்த தமிழ்நாடும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், அன்றைய நாளில் தவெக தலைவர் விஜய் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, தவெக தேர்தல் பிரிவு பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
பொதுவாக, கொளுத்தும் வெய்யிலில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் முடிந்ததும் ஓய்வுக்காக சென்னையிலிருந்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்வது வழக்கம். அந்த வகையில், தவெக தலைவர் விஜய் மே 4ஆம் தேதி இரவு ஆஸ்திரேலியா செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதாகத் தகவல்கள் பரவின.
ஆனால், அது உண்மையில்லை என்று ஆதவ் அர்ஜூனா கூறியிருக்கிறார். மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மட்டுமே விஜய் சிந்தித்து வருகிறார். மே 4ஆம் தேதி விஜய் ஆஸ்திரேலியா செல்லவில்லை. நிலவுக்கு செல்லவிருக்கிறார். திமுகதான் அதற்கான ராக்கெட்டைத் தயார் செய்து வருகிறது என்று கிண்டலமாக பதிலளித்தார்.
இதெல்லாம் வீண் வதந்திகள், இதற்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம், திமுக பரப்பி வரும் வதந்தி என்றும் ஆதவ் அர்ஜூனா பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்திருக்கும் நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 4ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி அன்று மாலை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், இந்த முறை தவெகவின் வரவால் போட்டி சற்று கடுமையாக மாறியிருந்தது.
தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், அரசில் கட்சிகள், கூட்டணி பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு பிறகு சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.
இந்த நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்து, தமிழ்நாடு தேர்தல் பரபரப்பு அடங்கி அமைதியாக இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது.
Summary
Adhav Arjuna has clarified whether TVK leader Vijay will be going to Australia on May 4th.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக கொலை மிரட்டல்! ஆதவ் அர்ஜூனா வேண்டுகோள்! | VCK | Vijay

ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?

மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?
விஜய் மீது வழக்குப்பதிவு... மிரட்டும் செயல்: ஆதவ் அர்ஜுனா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


