மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகிலுள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட லிங்காபுரம் வனப்பகுதியில், பிறந்து சில மாதங்களே ஆன குட்டி யானை ஒன்று தாய் யானையிடம் இருந்து பிரிந்து வனப்பகுதி சாலையோரம் சுற்றித் திரிவது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிங்காபுரம் – காந்தையூர் செல்லும் சாலையின் ஓரங்களில் அலைந்து திரியும் இந்த குட்டி யானை, தாயை தேடி தவிப்புடன் சுற்றித் திரிவதோடு, அருகிலுள்ள மக்களிடம் பயமின்றி சென்று விளையாட முயற்சிப்பதும் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மனவேதனையுடன் அதைப் பார்த்து பரிதாபப்படுகின்றனர்.
இந்நிலையில், சிறுமுகை வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குட்டி யானையை அதன் தாய் யானையுடன் மீண்டும் சேர்க்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். யானைக் கூட்டம் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தாய் யானையின் இருப்பிடத்தை கண்டறிந்து குட்டியை பாதுகாப்பாக சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், “குட்டி யானை தாயுடன் விரைவில் இணைந்தால் தான் நிம்மதி” எனக் கூறி வனத் துறையின் முயற்சி வெற்றியடைய வேண்டும் என எதிர்பார்த்து வருகின்றனர்.
Summary
Forest department officials are engaged in efforts to reunite a baby elephant, which is suffering after being separated from its mother near Mettupalayam, with its mother.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகையில் தாயைப் பிரிந்து தவித்த மற்றொரு புலிக்குட்டியை தேடும் பணி தீவிரம்

கோவையில் தாயைப் பிரிந்த குட்டி: ஏற்க மறுக்கும் யானைக் கூட்டம்! வனத்துறை முயற்சி தோல்வி!!

உதகையில் தாயைப் பிரிந்து தவித்த புலிக் குட்டி மீட்பு

மேட்டுப்பாளையம்: தாயைப் பிரிந்து சுற்றித்திரியும் குட்டியானை ஆற்றில் உற்சாக குளியல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


