திமுக ஆட்சிக்கு மதிப்பெண்கள் வழங்கும் நாள் இன்று என வாக்களித்த பின் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:
இன்றைய தினம் இந்த ஆட்சியின் சாதனைக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நல்ல ஆட்சிக்கும் மதிப்பெண் வழங்கும் நாளாகும்.
இந்த கூட்டணி கட்சியின் விசிக வேட்பாளர் எல்.இ.ஜோதிமணிக்கு பானை சின்னத்தில் வாக்களித்துள்ளேன்.
எங்களுக்கு மக்களுடைய ஆதரவு எழுச்சியாக உள்ளது. உங்கள் ஆட்சியில் மக்களை நாடி அரசு அலுவலகர்கள் செல்லும் சூழல் உள்ளது. மக்களை எளிமையாக சந்திக்கும் முதல்வர். எங்கள் கூட்டணி கட்சியினருக்கு அதிக அளவு ஆதரவு உள்ளது.
முதல்வர் ஸ்டாலின், இளம் வாக்காளர்களுக்கு இலவசப் பேருந்து, லேப்டாப் வழங்குதல், தவப் புதல்வன் திட்டம் கொணட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். ஆதலால் ஓரணியில் தமிழ்நாடு என்ற அடிப்படையில் 70% இளைஞர்களை திமுகவில் சேர்த்துள்ளோம். 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'போல தமிழக முழுவதும் ஸ்டாலின் அலை வீசுகிறது என்று கூறினார்.
பேட்டியின்போது ஒன்றியச் செயலாளர் ஜெயபாண்டியன், ஆசிரியர் மனோகரன் உள்ளிட்டோர் இருந்தனர்.
மேலும் திட்டக்குடி அதிமுக வேட்பாளர் நாக. முருகுமாறன் காட்டுமன்னார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
காட்டுமன்னார்கோவில் விசிக வேட்பாளர் எல்இபி ஜோதிமணி குடும்பத்தினருடன் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
பண்ருட்டி தொகுதி விசிக வேட்பாளர் அப்துல ரகுமான் தனது வாக்கினை குடும்பத்தினருடன் ஆர்சி உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
Summary
Today is the day to award marks to the DMK government: Minister M.R.K. Panneerselvam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தல் நாள்.. வாக்களித்த தலைவர்கள்!

அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!

பெண்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்; அவர்களே எங்கள் வாக்கு வங்கி: அமைச்சர் ரகுபதி

விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


