மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஓட்டுக்கு துட்டு! தேர்தலை ரத்துசெய்யக்கோரி அதிமுக வேட்பாளர் போராட்டம்!

கோவையில் வாக்காளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக, தேர்தலை ரத்து செய்யுமாறு அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் வலியுறுத்தல்

News image

அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் போராட்டம் - விடியோ க்ளிப்

Updated On :22 ஏப்ரல் 2026, 4:28 pm IST

கோவையில் வாக்காளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதால், தேர்தலை ரத்து செய்யுமாறு அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நாளை (ஏப். 23) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

மேலும், கட்சிகளின் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்ததால், தொகுதிகளில் வேட்பாளர்கள் யாரேனும் விதியை மீறி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனரா, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதனையும் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாகவும், கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கோவை தெற்கு தொகுதியின் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, தேர்தலை ரத்து செய்யுமாறும் அவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன்

அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன்

இதுகுறித்து, செய்தியாளருடன் அவர் பேசுகையில், ஜனநாயக முறைப்படி இங்கு தேர்தல் நடக்காது. ஆகையால், அதனை ரத்து செய்யுமாறு தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளேன்.

இந்தத் தேர்தல் அதிகாரியின் மீது் நம்பிக்கை இல்லை. அவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். காவல் ஆணையரும் ஒருதலைபட்சமாகவே செயல்படுகிறார். தேர்தல் ஆணையமும் இவர்களுக்குத்தான் ஆதரவாகச் செயல்படுகிறது.

நாங்கள் பிடித்துக் கொடுத்த ஆள்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை. வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் தப்புதானே. இன்று காலையில்கூட அழகப்ப செட்டி வீதியில் ரூ. 30 கோடி பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், அதனை என்ன செய்தார்கள்? அது வெளியில்கூட தெரியவில்லை. இன்று ஒவ்வொரு கவுன்சிலர் வீட்டிலும் பணம் கொடுக்கின்றனர்.

8 வழக்குகளில் நாங்கள்தான் பிடித்துக் கொடுத்தோம். இன்றுவரையில், அவர்கள் மீது எஃப்ஐஆர் கூட போடவில்லை.

வாக்காளர்களுக்கு மிரட்டலும் விடுக்கின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கவில்லை எனில், வாக்குச்சாவடிகளில் உள்ள கேமிரா மூலம் கண்டறிந்து விடுவதாக வாக்காளர்களை மிரட்டுகின்றனர் என்று தெரிவித்தார்.

Summary

Cash for Votes! AIADMK Candidate Stages Protest Demanding Cancellation of Election!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.