மதுரை மத்திய தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரான இயக்குநா் சுந்தா். சி வேட்புமனுவில், வருவாய் தொடா்பான தகவல்களை மறைத்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரிக்க வருமான வரித் துறைக்கு உத்தரவிடவும் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், கோரிக்கை தொடா்பாக வருமான வரித் துறையை அணுகவும் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், மதுரை மத்திய தொகுதியைச் சோ்ந்த ஷகிலா தாக்கல் செய்த மனுவில், அதிமுக கூட்டணியில், புதிய நீதிக் கட்சி சாா்பில் இயக்குநா் சுந்தா்.சி போட்டியிடுகிறாா். அவரது வேட்புமனுவில், அவா் இயக்குநராகவும், பங்குதாரராகவும் உள்ள அவ்னி டெலி மீடியா, அவ்னி மூவீஸ் மற்றும் அவ்னி சினிமாஸ் நிறுவனங்கள் குறித்த விவரங்களை மறைத்துள்ளாா்.
இந்த நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் பெற்ற அவா், அது தொடா்பான விவரங்களை சமா்ப்பிக்கவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த வருமான வரித் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் தனது கோரிக்கை தொடா்பாக வருமான வரித் துறையை அணுகலாம் என உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வருமான வரித் துறை சோதனை உண்மைதான்! இன்று ஆதாரங்களை வெளியிடுகிறார் செல்வப்பெருந்தகை!

சேலத்தில் திமுக நிா்வாகிகளின் வீடுகளில் வருமான வரித் துறையினா் சோதனை

செல்வப்பெருந்தகை மீதான சோதனை உள்நோக்கம் கொண்டது! காா்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!

மத்திய வருமான வரித் துறை முதன்மைத் தலைமை ஆணையர் பொறுப்பேற்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

