முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருவரும் ஒன்றாக பிரசாரம் செய்ய நேரமில்லை என்று திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை(ஏப். 18) தமிழகம் வரவிருக்கிறார். பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூரில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தமிழகம் வரவில்லை என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் ராகுல் காந்தி நாளை தமிழகம் வரவுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் ராகுல் காந்தியும் ஒன்றாக பிரசாரம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் அதுபற்றி பதிலளித்த திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி,
"ஏற்கனவே முதல்வரின் பிரசார பயணத் திட்டம் போடப்பட்டுவிட்டது. அதனால் அதனை மாற்ற முடியாது. அதனால் ராகுல் ஒருபக்கம் பிரசாரம் செய்வார், முதல்வர் அவர் திட்டமிட்டபடி பிரசாரம் செய்வார். ராகுல் பிரசாரத்தில் திமுக சார்பில் காலந்துகொள்வோம்.
ராகுல் ஒருநாள்தான் இங்கு வருகிறார். முதல்வரின் பிரசாரத்தில் மாற்றம் செய்தால் 30 -40 தொகுதிகள் பிரசாரம் பாதிக்கும். முதல்வர் ஏப். 20 ஆம் தேதி முதல் தனது தொகுதியில் பிரசாரத்திற்குச் செல்ல வேண்டும். அதனால் ஸ்டாலின், ராகுல் இருவரும் ஒன்றாக பிரசாரம் செய்ய நேரமில்லை" என்று கூறினார்.
Summary
M.K. Stalin and Rahul to Campaign Together? R.S. Bharathi Responds
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் இல்லாத காங்கிரஸ் பற்றி ராகுல் கவலைப்பட வேண்டும்! அண்ணாமலை
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!
பொன்னேரியில் மு.க. ஸ்டாலின் பெயரைக் குறிப்பிடாத ராகுல்! பெரியார் பற்றிப் புகழாரம்!

தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


