தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு ஒருபோதும் பாதிக்கப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் கே. அர்ச்சுனனுக்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்து இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
"இன்று கருப்புக்கொடி போராட்டம் என்கின்றனர். நான் வரும் வழியில் ஒரு கருப்புக் கொடியைக்கூட பார்க்கவில்லை. யார் வீட்டிலும் கருப்புக் கொடியைப் பார்க்கவில்லை. கோவை மக்கள் உஷாரான மக்கள். விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.
ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தொகுதி மறுவரையறையை கையில் எடுத்திருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டுக்கு வந்தபோது தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு ஒருபோதும் பாதிக்கப்படாது என்று கூறினார். தொகுதி மறுவரையறை தமிழகத்தில் எந்த விதத்திலும் பாதிக்காது என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்.
தொகுதி மறுவரையறை எப்படி செயல்படுத்தப்படும் என்று ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், தான் போராட்டம் செய்ததால்தான் மத்திய அரசு பணிந்துவிட்டது என்று சொல்வதற்காகவே இப்படிச் செய்கிறார். ஸ்டாலின் டபுள் கேம் ஆடுகிறார்.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படாது என்று மத்திய அரசு தெளிவாகக் கூறிவிட்டது. மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் தொகுதி மறுவரையறை இருக்கும். ஸ்டாலின் பற்றி மக்களுக்கு நன்றாகத் தெரியும்" என்று பேசினார்.
மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
No adverse impact on Tamil Nadu due to delimitation: EPS
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமி

6-ஆவது வெற்றியை எதிர்நோக்கும் இபிஎஸ்!
ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கியதே திமுகவின் சாதனை: எடப்பாடி பழனிசாமி

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

