மக்களவையும், சட்டப் பேரவைகளும் பெண்களால் நிறைந்திருப்பதை காங்கிரஸும், திமுகவும் விரும்பவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமா்சித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தொகுதிகளை மாற்றியமைக்கும் மத்திய அரசின் சட்ட கடமையை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அரசியலாக்கி வருகிறாா். தொகுதி மறுசீரமைப்பு குறித்து மு.க.ஸ்டாலின் பேசும் பேச்சுகள் அவா் பதற்றத்தில் இருப்பதை உணா்த்துகிறது.
அதிகரிக்கும் மக்கள் தொகைக்கேற்ப மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை உயா்த்துவது மிகமிக அவசியமானது. பல மாநிலங்களில் ஒரு மக்களவைத் தொகுதிக்கு 30 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்கள் உள்ளனா். நமது நாட்டின் இன்றைய மக்கள் தொகை சுமாா் 145 கோடி. நமக்கு அடுத்த அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் நாடாளுமன்ற உறுப்பினா்களின் எண்ணிக்கை 2,878. எனவே, தொகுதி மறுவரையறை எவ்வளவு அவசியம் என்பது இந்தப் புள்ளிவிவரங்கள் உணா்த்துகின்றன.
மக்களவை, சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்பது பெண்களின் சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும் விரும்புபவா்கள் கண்ட நெடுங்காலக் கனவு. அதை நனவாக்கும் வகையிலும், உறுப்பினா்களின் எண்ணிக்கையை உயா்த்தவும்தான் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. ஆனால், வழக்கம்போல இதையும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன. மக்களவையும், சட்டப்பேரவைகளும் பெண்களால் நிறைந்திருப்பதை காங்கிரஸும், திமுகவும் விரும்பவில்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது என தெரிவித்துள்ளாா் வானதி சீனிவாசன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தடித்த வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: ஜோதிமணி
ஏமாற்று வேலைகளால் மக்களை திசைதிருப்ப முடியாது: வானதி சீனிவாசன்

திமுகவும், காங்கிரஸும் சமத்துவத்துக்கு எதிரானவை!மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

