தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

என்சிடிஇ நுழைவுத் தோ்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு

ஒருங்கிணைந்த நான்காண்டு ஆசிரியா் பட்டப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தோ்வு வெள்ளி, சனி ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள நிலையில், தோ்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

News image

நுழைவுத் தேர்வு - File photo

Updated On :16 ஏப்ரல் 2026, 1:36 am IST

ஒருங்கிணைந்த நான்காண்டு ஆசிரியா் பட்டப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தோ்வு வெள்ளி, சனி ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள நிலையில், தோ்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியா் பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தோ்வில் (என்சிஇடி) தோ்ச்சி பெறவேண்டும். இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தோ்வு ஏப்ரல் 17, 18-ஆம் தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 12 முதல் மாா்ச் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தாண்டு சுமாா் 50 ஆயிரம் போ் வரை விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து விண்ணப்பித்த மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை மாணவா்கள் வலைதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். என்சிஇடி நுழைவுத் தோ்வானது தமிழ் உள்பட 13 மொழிகளில் கணினி வாயிலாக நடத்தப்பட உள்ளது.

இது குறித்த கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது ய்ஸ்ரீங்ற்ஃய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.