தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் நாளை (ஏப். 16) கருப்புக் கொடிப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை (ஏப்ரல் 16) தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை திருத்த மசோதாக்களை நிறைவேற்றி, அரசமைப்பில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை எழுப்பி வருகின்றனர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட விடியோவில் தெரிவித்திருப்பதாவது:
"டிலிமிட்டேஷன் என்ற பெயரில் பாஜக அரசு தனது லிமிட்டை தாண்டி, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது. வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்கும் வகையில் தென் மாநிலங்கள் அரசியல் வலிமையை இழக்கும் வகையில் நடப்பதை பார்த்துக் கொண்டு தமிழ்நாடு சும்மா இருக்காது.
ஒவ்வொரு குடும்பமும் தெருவுக்கு வந்து போராடும் எனத் தெரிவித்திருந்தேன். யார் நல்லது சொன்னாலும் கேட்காத மத்திய பாஜக அரசு இதையும் கேட்கவில்லை. சட்டத்திருத்தம் கொண்டு வந்து தமிழ்நாட்டின் குரலை ஒடுக்கப் பார்க்கிறார்கள். நாளை கொண்டுவரப்போகும் சட்டத் திருத்தத்தால் வட மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களின் தொகுதிகள் வேறுபடும்.
தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் தொகுதிகள் அதிகரிக்கப்படும் எனக் கூறிவிட்டு, அவர்களுக்கு சாதகமான வட மாநிலங்களுக்கு மிக மிக கூடுதலாக தொகுதிகள் அதிகரிக்கப்பட்டு, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவமே தேவையில்லை என்ற நிலையைக் கொண்டு வரப் போகிறார்கள். இதைதான் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி எனக் கூறுகிறோம்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை இது. தேச வளர்ச்சிக்காக நாங்கள் துணை நின்றால் எங்களின் அரசியல் உரிமையைப் பறிப்பீர்களா?
தமிழர்களையும் தென் மாநில மக்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாக பார்க்கிறீர்கள். தில்லி பாஜகவுக்கு தமிழர்கள் யார் எனக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாஜகவுக்கு எதிராக தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நாடாளுமன்றத்தில் நாளை அவர்கள் கொண்டு திட்டமிட்டிருக்கும் கருப்புச் சட்டத்துக்கு எதிராக அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றுங்கள். இந்தியாவை இருண்ட காலத்துக்கு அழைத்துச் செல்லும் எதேச்சதிகார பாஜக அரசுக்கு எதிராக கருப்புக் கொடியேற்றுவோம். இது தமிழ்நாட்டுக்கும் தில்லிக்கும் எதிரான போராட்டம் என்பதை பாஜக தொடர்ந்து நிரூபிக்கிறது. அவர்களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்பதற்காக சதித் திட்டத்தை சட்டமாகவே கொண்டு வருகிறார்கள். சதியை எப்படி சட்டமாக இயற்ற முடியும்? ஒவ்வொரு வீட்டிலும் பொது இடங்களிலும் கருப்புக் கொடியேற்றுவோம்.
மீண்டும் எச்சரிக்கை விடுக்கிறேன். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக் கூடாது. இந்த கருப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது. 8 கோடி தமிழர்களின் ஒற்றைக் கோரிக்கை இது. அரசியல் எல்லைக் கடந்து தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க தமிழ்நாடே ஓங்கி ஒலிக்கட்டும். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
Delimitation! Black Flag Protest in Tamil Nadu Tomorrow! — M.K. Stalin Announces
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு: திமுகவினா் கருப்புக் கொடியேற்றும் போராட்டம்

தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இன்று கருப்புக் கொடி போராட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
