அம்பேத்கரின் லட்சியப் பாதையில் பயணிப்போம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளையொட்டி, அரசியல்கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னையில் உள்ள பனையூர் உள்ள தவெக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணல் அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டி பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை நிலைநிறுத்தியவர்.
வலுவான அடித்தளம் அமைத்து, எளியவர்களுக்கும் அதிகாரம் கிடைக்கப் பாடுபட்டவர். நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
நம் கொள்கைத் தலைவரின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் அமைக்கும் லட்சியப் பாதையில் பயணிப்போம். மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Tamilaga Vettri Kazhagam President Vijay has paid tribute, pledging to journey along the path of Ambedkar's ideals.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

பெண் தற்கொலை! ரூ.8,000 கூப்பன் - மண்ணுளிப் பாம்பா? இரிடியமா? விஜய் கண்டனம்!

அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

