மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆரும், மூர்த்தியும் மதுரை மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், மதுரை மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர் பிடிஆர், அமைச்சர் மூர்த்தியும் பொய் பேசுகிறார்கள். அதற்காக அவர்கள் மதுரை மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் உண்மையிலேயே மெட்ரோ ரயில் திட்டம் கேட்டீர்கள் என்றால் மத்திய அரசுக்கு நீங்கள் அனுப்பிய கடிதத்தை வெளியிடுங்கள். மாநில அரசு மெட்ரோ கேட்கவில்லை, பேருந்துதான் கேட்டிருக்கிறார்கள்.
நாங்கள் மதுரைக்கு மெட்ரோ கொடுப்பது தடுத்து விட்டதாக அமைச்சர்கள் மதுரையில் பொய் சொல்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மே 4ஆம் தேதிக்குப் பிறகு புதிதாக திட்ட அறிக்கையில் மக்கள் தொகையை குறிப்பிட்டு மெட்ரோ ரயில் திட்டத்தை பெற்று தருவோம். அக்டோபர், நவம்பர் மாதத்திற்குள் எய்ம்ஸ் பணிகள் நிறைவடைந்து திறக்கப்படும். தமிழகத்தில் எவ்வளவு பிரச்னை நடக்கிறது. ஆனால் ஐபிஎல் பார்ப்பதுதான் முதல்வருக்கு வேலையா.
சென்னை, டெல்லி அணியில் தமிழக வீரர்களும் விளையாடுகிறார்கள். கோபாலபுரத்தில் ஊழல்வாதிகளுக்கும் தமிழக மக்களுக்கும் இடையில் நடக்கும் தேர்தல்தான் இது. தில்லிக்கும் தமிழகத்திற்கும் நடக்கும் தேர்தல் இல்லை. விஜய் அவருடைய கட்சிக்கு ஓட்டு கேட்கிறார். திமுக கட்சிக்கு ஒவ்வொரு பலம் இருக்கும் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் பற்றி பேசுகிறேன்.
தமிழக வெற்றிக் கழக விஜய் பிரசாரத்திற்கு வரும்போது தேர்தல் ஆணையம் அனுமதி கொடுக்க வேண்டும். கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமை முழுமையாக காவல்துறைக்கு மட்டும் உள்ளது என்று சொல்ல முடியாது. எல்லோரும் இதில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முடிவில் பிரசாரத்தில் விஜய் பேச வேண்டும. இரண்டு நாட்களுக்கு முன்பு காரைக்குடியில் ரோட் ஷோவில் அவர் பேசவில்லை என்று சொன்னார்கள்.
அதில் எனக்கு உடன்பாடு இல்லை. விஜய் பேச வேண்டும். பேசுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். அனைத்து இளைஞர்களும் நம்முடன் இருக்கிறார்கள் யாருக்கும் வருத்தம் இல்லை. இந்த தேர்தல் இளைஞர்கள் தீர்மானிக்கக் கூடிய தேர்தல். வாக்கு செலுத்தும் போது சிந்தித்துப் போடுங்கள். தேஜ கூட்டணி வலிமையாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
Summary
Former BJP President Annamalai has stated that Ministers PTR and Moorthy should tender a public apology to the people of Madurai regarding the Metro issue.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் அஜித்துக்கு இபிஎஸ், அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து
வாக்காளர்களுக்கு பேருந்து பற்றாக்குறை, தங்கக் காசு விநியோகம்... அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் இல்லாத காங்கிரஸ் பற்றி ராகுல் கவலைப்பட வேண்டும்! அண்ணாமலை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


