தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுக-வில் இணைந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர் அஜிதா ஆக்னல். இவர் சில மாதங்களுக்கு முன் தனது பெயர் தவெக மாவட்டச் செயலாளர் பட்டியலில் இடம்பெறாததால் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தின் வாயிலில் தனது ஆதரவாளர்களுடன் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்.
அப்போது கட்சியின் தலைவர் விஜய்யின் காரை மறித்து அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இது கட்சியினரிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சில நாள்களுக்கு முன் வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தவெக வேட்பாளர் பட்டியலில் தூத்துக்குடி தொகுதியில் தனது பெயர் இடம்பெறும் என அஜிதா எதிர்பார்த்தார். ஆனால், விஜய்யின் நண்பரான ஸ்ரீநாத் அந்தத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அஜிதா கட்சிக்காக தொடர்ந்து உழைத்து வந்ததாகக் கூறப்படும் நிலையில் அவருக்கு சீட் வழங்கப்படாததால் கட்சி தலைமை மீது அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அஜிதா ஆக்னல் தனது ஆதரவாளர்களுடன் இன்று கனிமொழி எம்.பி. முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
Summary
TVK functionary Ajitha Agnel joined the DMK today along with her supporters.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK

தவெக ஆட்சிக்கு திமுக இடையூறு செய்யாது: மு.க. ஸ்டாலின்

சிறுமிக்கு பாலியல் தொல்லை! தவெக நிர்வாகி ‘பாம்பு’ தினேஷ் கைது!

திமுகவில் இணைந்தாா் அஜிதா ஆக்னல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

