ஐபிஎல் தொடருக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், நகரில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்குத் தடையற்ற பயணத்தை வழங்கவும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் CSK Cricket Limited நிறுவனத்துடன் இணைந்து “IPL 2026” லீக் போட்டிகளைக் காண வரும் ரசிகர்களுக்காக, பிரத்யேக மெட்ரோ பயணங்களை வழங்க முன்வந்துள்ளது.
அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிகள் இடையிலான IPL 2026 லீக் போட்டி எண் 18, நாளை, 11 ஏப்ரல் 2026 அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக ரசிகர்களுக்கு ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணங்களும், கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்பான்சர் செய்யப்பட்ட IPL போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள், பயணச்சீட்டுகளில் (both Digital & Physical) உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். சென்னையில் செயல்பாட்டில் உள்ள எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
ஏப்ரல் 11, 2026 அன்று CSK மற்றும் DC அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நீட்டிக்கப்பட்ட சிறப்பு மெட்ரோ ரயில் சேவை குறித்த விவரங்கள்:
அரசினா் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலைய மெட்ரோ நிலையங்களை நோக்கிச் செல்லும் கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 01:00 மணிக்கு புறப்படும்.
பச்சை வழித்தடத்தில் (வழித்தடம் 2) உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டுமே வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம்.
பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
IPL 2026 போட்டியை காண செல்பவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் இந்த ஆட்டம் இரவு 7:30 மணிக்குத் தொடங்குகிறது.
சென்னை அணி தான் விளையாடிய முதல் மூன்று ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவியது. இதனால் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும் எனத் தெரிகிறது.
அதேசமயம் நாளைய ஆட்டத்தில் தோனியும் களமிறங்குவார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தசை பிடிப்பு காரணமாக சென்னை அணி விளையாடிய முதல் 2 ஆட்டங்களிலும் அவர் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The Chennai Metro Rail Limited (CMRL) has announced that you can travel for free on the Metro tomorrow using your IPL ticket.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிரிக்கெட் ரசிகா்களுக்கு மெட்ரோ பயணச்சலுகை

சென்னை மெட்ரோவுக்கு உலகளாவிய விருது!

ஐபிஎல் போட்டிக்கு செல்வோா் மெட்ரோவில் பயணிக்க ஏற்பாடு

‘மெட்ரோ ரயிலில் சக பயணிக்கு இடையூறு அளித்தால் அபராதம்’
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

