மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

டியூஷன் அக்கா திட்டம்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!!

தமிழகத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாகியிருக்கிறது.

News image

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

Updated On :9 ஏப்ரல் 2026, 4:09 pm IST

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் அக்கா திட்டம் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை தமிழக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவர் கார்த்தி ப. சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வெளியிட்டார். 10 தலைப்புகளைக் கொண்ட தேர்தல் வாக்குறுதி வெளியாகியிருக்கிறது.

அதில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3 லட்சம் அரசுப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

காவல்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு டியூஷன் அக்கா திட்டம் செயல்படுத்தப்படும்.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் ஓய்வூதியமாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

Summary

The Congress election manifesto has been released ahead of the Tamil Nadu elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.