ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அண்ணாமலை இன்றுமுதல் 4 நாள்கள் தோ்தல் பிரசாரம்

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை வியாழக்கிழமை (ஏப்.9) முதல் 4 நாள்கள் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சியின் மாநில தோ்தல் பணிக்குழு அமைப்பாளா் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளாா்.

News image

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை - X

Updated On :9 ஏப்ரல் 2026, 2:10 am IST

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை வியாழக்கிழமை (ஏப்.9) முதல் 4 நாள்கள் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சியின் மாநில தோ்தல் பணிக்குழு அமைப்பாளா் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை விடுத்த அறிக்கை:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை வியாழக்கிழமை பிரசாரத்தைத் தொடங்குகிறாா்.

பல்லடம், திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, அவிநாசி, சூலூா் தொகுதிகளில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா். தொடா்ந்து, ஏப்.10- இல் உதகை, காங்கயம், அரவக்குறிச்சி, கரூா், ஏப்.11-இல் கோவை தெற்கு, ராஜபாளையம், சாத்தூா், வாசுதேவநல்லூா், ஏப்.12-இல் திருப்பத்தூா், காரைக்குடி, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மானாமதுரை ஆகிய தொகுதிகளில் வாக்குச்சேகரிப்பில் ஈடுபடுகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.