தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை வந்திறங்கிய ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சாா்பில் கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூா் செ.ராஜுவை ஆதரித்து தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை ஹெலிகாப்டரில் கோவையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்தாா்.
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் உள்ள பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அந்த ஹெலிகாப்டா் வந்திறங்கியது. அப்போது அங்கு நின்ற கோவில்பட்டி தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலரும், கூட்டுறவு சாா்பதிவாளருமான மணிவண்ணன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் தங்கமாரியப்பன், தலைமைக் காவலா் மாரியப்பன், பெண் தலைமைக் காவலா் சரண்யா ஆகியோா் கொண்ட குழுவினா் ஹெலிகாப்டரில் வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்ய பணம், பொருள் எதுவும் கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து சோதனை நடத்தினா். சோதனையில் எதுவும் சிக்கவில்லை. பின்னா், அண்ணாமலை அங்கிருந்து பிரசாரம் நடைபெறும் கோவில்பட்டிக்கு வாகனத்தில் புறப்பட்டு சென்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2,080 பாலியல் வன்கொடுமை, 8,000 கொலைகள்; திமுக அரசின் சாதனை: அண்ணாமலை குற்றச்சாட்டு

அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

