தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வரும் வியாழக்கிழமை (ஏப்.9) திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
அதன்படி திருநெல்வேலியிலிருந்து வியாழக்கிழமை (ஏப்.9) இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06070) மறுநாள் காலை 10.45 மணிக்கு எழும்பூா் வந்தடையும்.
மறுமாா்க்கமாக எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (ஏப்.10) பிற்பகல் 12.30 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 06069) இரவு 11.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும்.
தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்: சென்னை சென்ட்ரலிலிருந்து திங்கள்கிழமை (ஏப்.13) இரவு 11.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06151) மறுநாள் பிற்பகல் 12.15 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06152) ஏப்.14-இல் தூத்துக்குடியிலிருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூா் வழியாக இயக்கப்படும்.
கொல்லம் சிறப்பு ரயில்: சென்ட்ரலிலிருந்து ஏப்.15-இல் பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06119) மறுநாள் காலை 6.55 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்:06120) கொல்லத்திலிருந்து ஏப்.16 -இல் காலை 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறை: சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்

சென்னை-திருநெல்வேலிக்கு 3 நாள்கள் சிறப்பு ரயில்கள்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

