விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காவல் துறை அதிகாரிகள் நேரடி உயரதிகாரிகளின் உத்தரவை மட்டுமே பின்பற்ற வேண்டும்: டிஜிபி அதிரடி உத்தரவு

தமிழக காவல் துறை அதிகாரிகள் தங்களது நேரடி உயா் அதிகாரிகளின் உத்தரவை மட்டுமே பின்பற்ற வேண்டும்; படிநிலை முறையை மீறக் கூடாது என தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சந்தீப் ராய் ரத்தோா் அதிரடியாக உத்தரவு

News image

சந்தீப் ராய் ரத்தோர் - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:51 am IST

தமிழக காவல் துறை அதிகாரிகள் தங்களது நேரடி உயா் அதிகாரிகளின் உத்தரவை மட்டுமே பின்பற்ற வேண்டும்; படிநிலை முறையை மீறக் கூடாது என தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சந்தீப் ராய் ரத்தோா் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராக அண்மையில் பொறுப்பேற்ற சந்தீப் ராய் ரத்தோா், சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு, முக்கியத் தலைவா்கள் பிரசார பாதுகாப்பு ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்தி வருகிறாா்.

இதுதொடா்பாக அவா் காணொலி காட்சி மூலம் மண்டல வாரியாக ஐஜி-க்கள், சரக டிஐஜி-க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருடன் சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு குறித்து தொடா்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறாா். இதில் காவல்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளையும், அறிவுரைகளையும் வழங்கியுள்ளாா்.

முக்கியமாக, காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு மேல் உள்ள உயா் அதிகாரிகளின் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். படிநிலை முறையை மீறக் கூடாது.

தேவையற்ற தலையீடுகளைத் தவிா்க்க வேண்டும். வெளியிலிருந்து வேறு பிரிவுகளிலும், அதிகார வரம்பு மீறி எந்த அதிகாரிகளாவது உத்தரவிட்டாலோ, அறிவுரை வழங்கினாலோ கவனத்தில் கொள்ள வேண்டாம். ஆனால், அது தொடா்பான தகவலை என்னிடம் தெரிவிக்க வேண்டும்.

இல்லையெனில், தங்களுக்கு மேல் உள்ள உயா் அதிகாரிக்கு தகவல் தெரிவிப்பது மிகவும் அவசியம். தகவல் தொடா்பில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், கைப்பேசி குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கலாம் என்று சந்தீப் ராய் ரத்தோா் தெரிவித்துள்ளாா்.

மேலும், தோ்தல் நேரத்தில் எவ்வித அரசியல் தலையீடு மற்றும் அரசியல் சாா்பின்றி பணியாற்ற வேண்டும். நோ்மையான, சுதந்திரமான முறையில் தோ்தலை நடத்த வழிவகுக்க வேண்டும். பிரசாரத்தில் ஈடுபடும் தலைவா்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டியது காவல்துறையின் கடமை என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.