விழுப்புரம்- நாகை தேசிய நெடுஞ்சாலை பல கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்குப் பயன்படுத்தி வரும் நிலையில் சிதம்பரம் அருகே எருக்கன்கட்டுப்படுகை பகுதியில் கொள்ளிடம் ஆற்றுக்கு முன்பாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் திங்கள்கிழமை அதிகாலை சுமார் 20 அடி பள்ளம் திடீரென உள்வாங்கியுள்ளது.
குறிப்பாக அந்த பகுதியில் பல்வேறு தற்காலிக பணிகள் மேற்கொண்டு வந்ததால் நள்ளிரவில் ஏற்பட்ட பள்ளத்தைப் பார்த்த தேசிய நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் அருகில் இருந்த குடியிருப்பு மக்களை நள்ளிரவில் வீட்டிலிருந்து காலி செய்யும்படி கூறியுள்ளனர். தற்போது தொடர்ந்து பாலம் உள்வாங்கி வருவதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
கொள்ளிடம் ஆற்றுக்கு முன்பாக வயல்வெளி இருந்தது அந்த பகுதியில் சரியான முறையில் கான்கிரீட் அமைக்காமல் அவசர கதியில் மேம்பாலம் கட்டியதால் தொடர்ந்து அந்த பகுதியில் பாலம் அவ்வப்போது சேதமாகி வருவதை ஊழியர்கள் சரி செய்து வருவதாகவும் உள்ளது. பணிகள் மேற்கொண்டாலும் மீண்டும் மீண்டும் பாலம் சேதம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு பணிகள் நடைபெற்று இருக்கும்போது பாலம் திடீரென உள்வாங்கியுள்ளது.

இதனைப் பார்த்த ஊழியர்கள் போக்குவரத்தை நிறுத்திவிட்டு அதிகாரிகள் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்கு வீட்டை காலி செய்து செல்லும் படியும் குழந்தைகள் கால்நடைகளை நாங்கள் அருகாமைக்கு அழைத்துச் சென்றதாகவும் நிம்மதியான முறையில் வாழ முடியவில்லை எனவும் வேதனை தெரிவித்தனர்.
கட்டுமான பணிகளைத் தரமற்ற முறையில் செய்ததாலும் அவசர கதியில் பணிகளை மேற்கொண்டதாலும் தொடர்ந்து இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்தப் பகுதியில் உள்ள மேம்பாலத்தை முற்றிலும் அகற்றிவிட்டு புதிய கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும், வயல்வெளி பகுதியில் கான்கிரீட் அமைத்து பணிகளை மேற்கொண்டால் மட்டுமே நாங்கள் பணிகளை நடத்த விடுவோம். எங்களுக்கு உரியப் பாதுகாப்பு இல்லை என்றால் மாற்று இடம் கொடுத்து வீடு கட்டி தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
Summary
A pit approximately 20 feet deep has suddenly opened up on the Villupuram–Nagapattinam National Highway flyover.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்கள்!

சேத்தியாத்தோப்பு அருகே விபத்தில் இளைஞா் காயம்: கிராம மக்கள் சாலைமறியலால் போக்குவரத்து பாதிப்பு

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சேதுபாவாசத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்வாங்கியது: போக்குவரத்து நிறுத்தம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


