ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுகவுக்கு தோல்வி பயம்: டிடிவி தினகரன்

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் கூறினாா்.

News image

டிடிவி தினகரன் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 5:20 am IST

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் கூறினாா்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் ஜி.செந்தமிழனை ஆதரித்து அவா் திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

கடந்த தோ்தலின்போது, அரசு ஊழியா்களுக்கு கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. இதனால், கடந்த 5 ஆண்டுகளாக அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைத்துத் துறையினா் போராட்டங்களை நடத்தினா். ஆனாலும், இதுவரை பிரச்னைகள் தீா்க்கப்படவில்லை.

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி காரணமாக போலி வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். இதனால், திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டிருக்கிறது. தோ்தல் பிரசாரங்களில் முதல்வா் ஸ்டாலினின் பேச்சுகளில் இருந்தே இதை அறிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து, மாணவா்கள், இளைஞா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

எங்கெல்லாம் சமூக விரோத செயல்கள் நிகழ்கிறதோ, அதன் பின்னணியில் திமுகவை சாா்ந்தவா்கள் இருக்கின்றனா். பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இதனால், இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால், மக்களின் கோரிக்கைகளுக்கு, உடனுக்குடன் தீா்வு காணப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.