விஜய்யை பார்க்கச் சென்று இளைஞர்கள் விபத்தில் சிக்குவது வருத்தமளிப்பதாக அதிமுக கொள்கைப் பரப்பு துணைச்செயலர் காளியம்மாள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டியில், தவெக கட்சியில் இருக்கும் பிள்ளைகள் அரசியல் படுத்தப்பட வேண்டும். விஜய் ஒரு நடிகர், அவரை பார்க்க ஆர்வம் இருக்கும் என்பது உண்மைதான். என்றாலும் அவர் பொதுத் தளத்திற்கு வந்து விட்டதால் இனிமேல் அடிக்கடி பார்க்கும் சூழல் இருக்கும் என்பதை உணர வேண்டும்.
விஜய் மக்களைச் சந்திக்கத்தான் போகிறார். அவரைப் பார்க்கின்ற ஆசையில் இளைஞர்கள் விபத்தில் சிக்குவது வருத்தம் அளிக்கிறது. இளைஞர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் பெற்றோர்கள் தவிப்பதை பார்க்க வேண்டும். தஞ்சாவூர் விபத்தில் பலியான இளைஞரின் தந்தை அளித்த பேட்டி மனதிற்கு மிகவும் வலியாக இருந்தது.
அதுபோலத்தான் கரூர் சம்பவம். இளைஞர்கள் அரசியலை உற்றுநோக்க வேண்டும். இளைஞர்களுக்கு ஒருவர் மீது பற்றும், பாசமும் இருக்க வேண்டியதுதான். ஆனால் அது உயிரைப் போக்கின்ற அளவில் இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றுதான். எம்ஜிஆரை பார்க்க மக்கள் 3 நாட்கள் காத்திருந்தனர். இவ்வாறு கூறினார்.
Summary
Kaliyammal expressed grief over the accidents involving youngsters who were traveling to catch a glimpse of Vijay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்
பெரிய தாக்கம்! விஜய்யை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

‘பெண்கள் அரசியலுக்கு வர அடித்தளம் அமைத்தவா் ஜெயலலிதா’

காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுடன்தான் விஜய்யை சந்தித்தேன்: பிரவீண் சக்ரவர்த்தி தகவல்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

