மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விஜயகாந்த்போல விஜய்யும் திமுகவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

திமுகவுக்கு தவெகவின் தலைவர் விஜய் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என டிடிவி தினகரன் பேச்சு

News image

விஜயகாந்த் | விஜய் - சித்திரிப்பு

Updated On :4 ஏப்ரல் 2026, 2:51 pm IST

தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு தவெகவின் தலைவர் விஜய் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் டிடிவி தினகரன் பேசுகையில், "மறைந்த விஜயகாந்தை போல விஜய்யும் உறுதியாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார். ஆனால், அந்தத் தாக்கம் ஆளுங்கட்சியாக திமுகவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

2006 தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவுக்கு எப்படி விஜயகாந்த் பாதிப்பை ஏற்படுத்தினாரோ, அதுபோலவே.

ஏற்கெனவே, மக்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர். எப்போதுமே திமுக ஆட்சியில் மக்களின் எதிர்ப்பு, ஓர் அமைதிப் புரட்சியாக வெளிப்படும். 2001 தேர்தலுக்கு முன்னரும், 2011 தேர்தலுக்கு முன்னரும் அப்படித்தான் இருந்தது. அதேபோலத்தான் கடந்த 2026 தேர்தலிலும்.

யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில், இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என மக்கள் உறுதியாக இருக்கின்றனர். அது தேசிய ஜனநாயக கூட்டணிக்குச் சாதகமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

Summary

Like Vijayakanth, TVK Vijay too will have an impact on the DMK: AMMK Leader TTV Dhinakaran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.