தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சட்டப்பேரவைத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவதில் குழப்பம்?!

சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுவதில் குழப்பம் நீடிக்கிறது.

News image

திருமாவளவன் எம்.பி. - X

Updated On :4 ஏப்ரல் 2026, 5:18 pm IST

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முடிவை விசிக தலைவரும் மக்களவை எம்பியுமான திருமாவளவன் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 8 தொகுதிகளில் விசிக போட்டியிடுகின்றது. இதற்கான வேட்பாளர் பட்டியலை விசிக தலைவர் திருமாவளவன் சில நாள்களுக்கு முன் வெளியிட்டார்.

அந்தப் பட்டியலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தொல். திருமாவளவன் போட்டியிடுவதாகக் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

திருமா ஏற்கனவே 2024 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.யாக உள்ளார். எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிடுவது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது.

இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முடிவை திருமா பரிசீலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 6 அன்று முடிவடையும் நிலையில் தற்போது வரை அவர் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்துக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமா போட்டியிடாதது பற்றி விசிக சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும், இதுபற்றிய அறிவிப்பை திருமா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

எனவே, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவுக்கு பதிலாக விசிக மாநில அமைப்புச் செயலர் இளமாறன் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Summary

Confusion over Thirumavalavan contesting the Assembly elections

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.