மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது? - நயினார் நாகேந்திரன் பதில்!

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி...

News image

நயினார் நாகேந்திரன் - கோப்புப்படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 2:45 pm IST

பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை(ஏப். 3) வெளியாக வாய்ப்புள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் இழுபறி நீடித்து வருகிறது. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாள்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,

"மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை(ஏப். 3) இங்கு வருகிறார். அதன்பின்னர் முடிவெடுத்து அறிவிக்கப்படும். இதில் காலதாமதம் எதுவும் இல்லை. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. நாளை பிரதமர் இங்கு வந்து பின்னர் புதுச்சேரி செல்கிறார். எங்களுடைய மையக் குழுவின் மூத்த தலைவர்கள் பிரதமரைச் சந்திப்பார்கள். பாஜக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும்" என்றார்.

மேலும் "தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா பயன்பாடுதான் இருக்கிறது. பள்ளி வாசல்களில் மிட்டாய்க்கு பதிலாக கஞ்சா விற்கப்படுகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கை ஹீரோ அல்லது ஜீரோ.

விஜய் திருச்சி கிழக்கில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது அவருடைய விருப்பம்., மக்கள் எந்தளவுக்கு வாக்கு செலுத்துகிறார்கள் என்பதைப் பொருத்து முடிவு இருக்கிறது.

தமிழ்நாட்டில் விஜய்க்கு மட்டுமா பாதிப்பில்லை? திமுக ஆட்சியில் எந்த தனி மனிதனுக்கும் பாதுகாப்பில்லை" என்று கூறினார்.

Summary

BJP state leader Nainar Nagendran responds on BJP candidates list

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.