அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் மூன்றே மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் இன்று (ஏப். 1) தெரிவித்தார்.
போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்ததால், தமிழகத்தின் பல பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், போதைப் பொருள்களை கட்டுப்படுத்தியிருந்தால், அதனால் ஏற்படும் குற்றங்கள் குறைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
''இந்த மண் வீரம் நிறைந்தது, தனி வரலாறு இதற்கு உண்டு. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைத்ததும், ஜல்லிக்கட்டு ஆன்லைன் முன்பதிவு முறை ரத்து செய்யப்படும். ஜல்லிக்கட்டு நடத்த தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு காப்பீடு வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அளிக்கப்படும்.
தோல்வி பயத்தால் காங்கிரஸ் காலில் விழுந்து திமுக கூட்டணி வைத்துள்ளது. திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 18,000 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தைகளின் கதறல் அப்பா ஸ்டாலினுக்கு எட்டவில்லையா?
பழனிசாமி கைகளில் ரத்தக்கறை பதிந்துள்ளதாக மு.க. ஸ்டாலின் பேசுகிறார். யாருடைய கை ரத்தக் கறை பதிந்த கை?
எடப்பாடி பழனிசாமி முழு சங்கியாக மாறிவிட்டதாக உதயநிதி ஸ்டாலின் அவதூறு பேசுகிறார்.
போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்ததால், தமிழகத்தின் பல பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
போதைப் பொருள்களை கட்டுப்படுத்தியிருந்தால், அதைப் பயன்படுத்திவிட்டு ஏற்படும் குற்றங்கள் குறைந்திருக்கும். போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு வேண்டும்.
பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதை உதயநிதி விமர்சிக்கிறார். அப்படியென்றால், பாஜகவுடன் கூட்டணி வைத்த கருணாநிதி சங்கியா? பதவிக்கு ஏற்ப பேசிப் பழக வேண்டும்'' என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
Summary
TN Election 2026 We Will Eradicate Drugs Within Three Months Edappadi Palanisamy campaign
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி

அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்

திமுகவில் ஊழலுக்காக பதவி ராஜிநாமா! மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


