மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

இஎஃப்எல் கோப்பையில் வீரர்கள் மோதல்..! நியூகேஸிலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய எவர்டன்!

இஎஃப்எல் கோப்பைக்கான எவர்டன் - நியூகேஸில் இடையேயான போட்டியில் வீரர்கள் மோதிக்கொண்டது குறித்து...

Players clash; Everton revels in victory

மோதிக்கொண்ட வீரர்கள், வெற்றிக் களிப்பில் எவர்டன் - படங்கள்: எக்ஸ்/ எவர்டன்

Published On :30 அக்டோபர் 2026, 5:41 pm IST

இங்கிலாந்தில் நடைபெறும் இஎஃப்எல் கோப்பை எவர்டன் - நியூகேஸில் இடையேயான போட்டியில் வீரர்கள் மோதிக்கொண்ட விடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இஎஃப்எல் கோப்பை நான்காவது சுற்றில் நியூகேஸிலை வீழ்த்தி எவர்டன் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. அதில் ஆர்செனலை வீழ்த்திய ஃபிலீக்வுட் அணியுன மோதவிருக்கிறது.

இங்கிலாந்தில் நடைபெறும் இஎஃப்எல் கோப்பை (இங்கிலீஷ் லீக் கோப்பை) கராபாவ் கோப்பை எனவும் அழைக்கப்படுகிறது. இதில் காலிறுதிக்கு 8 அணிகள் தேர்வாகியுள்ளன.

எவர்டன் - நியூகேஸில் இடையேயான போட்டியில் கடைசி நேரத்தில் வீரர்கள் மோதிக்கொண்டனர். அதில் நியூகேஸில் அணிக்கு 3 வீரர்களுக்கு, எவர்டினில் ஒரு வீரருக்கும் யெல்லோ கார்டு அளிக்கப்பட்டன.

இந்தப் போட்டியில் எவர்டன் 3-0 என்ற கோல் கணக்கில் நியூகேஸிலை வீழ்த்தியது. இதில் எவர்டன் 34, 45, 69ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தது.

நியூ கேஸில் வீரர் டான் பர்ன் 89ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தார். இவரை எவர்டன் வீரர் கீழே தள்ளியதால் அவரை வலைக்குள் தள்ளி, கழுத்தை நெறித்தார். இதனா ஆடுகளத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த இரண்டு அணிகளும் பிரீமியர் லீக்கில் வரும் நவ.3ஆம் தேதி மோதவிருக்கிறது. இந்த சண்டையினால் அந்தப் போட்டி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Summary

Everton vs Newcastle: Joelinton yellow carded after tussle with Jordan Pickford, EFL Cup quarter-finals for

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.