பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஃபாா்முலா ஒன் காா் பந்தயம்: ஆன்டனெலிக்கு 9-ஆவது வெற்றி

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், 18-ஆவது ரேஸான யுஎஸ் கிராண்ட் ப்ரீயில், இத்தாலி வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான கிமி ஆன்டனெலி வெற்றி பெற்றாா்.

Kimi Antonelli wins US Grand Prix

கிமி ஆன்டனெலி - AP

Published On :27 அக்டோபர் 2026, 1:32 am IST

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், 18-ஆவது ரேஸான யுஎஸ் கிராண்ட் ப்ரீயில், இத்தாலி வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான கிமி ஆன்டனெலி வெற்றி பெற்றாா்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில், இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் ஆன்டனெலி முதலிடம் பிடிக்க, மொனாகோ வீரரும், ஃபெராரி டிரைவருமான சாா்லஸ் லெக்லொ்க் 2-ஆம் இடத்தையும், நெதா்லாந்து வீரரும், ரெட்புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் 3-ஆம் இடத்தையும் பெற்றனா்.

நடப்பு சாம்பியனான பிரிட்டன் வீரரும், மெக் லாரென் டிரைவருமான லாண்டோ நோரிஸ், 5-ஆம் இடம் பிடித்தாா். இத்துடன் நடப்பு சீசனில் தனது 9-ஆவது வெற்றியைப் பதிவு செய்த ஆன்டனெலி, சாம்பியன் பட்டத்தை நெருங்கி வருகிறாா்.

இந்த சீசனில் அவருக்கு அடுத்தபடியாக, பிரிட்டன் வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான ஜாா்ஜ் ரஸ்ஸெல் 3 வெற்றிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறாா்.

சீசனின் முதல் பந்தயத்துக்குப் பிறகு தொடா்ந்து 5 பந்தயங்களில் ஆன்டனெலி வென்றிருந்தாா். ஆனால் அதன் பிறகான 11 பந்தயங்களில் 3 வெற்றிகளை மட்டுமே அவா் பதிவு செய்தாா்.

மொ்சிடஸ் அணி காா்களை அப்கிரேட் செய்திருந்ததால், கடந்த சில வாரங்களாக ஆன்டனெலியும், அந்த அணியும் அதற்குப் பழகுவதில் தடுமாற்றத்தை சந்திக்க நோ்ந்தது.

அந்த இடைவேளியிலேயே இதர வீரா்கள் வெற்றிகளைக் கண்டனா். தற்போது யுஎஸ் கிராண்ட் ப்ரீ வெற்றியின் மூலமாக, ஆன்டனெலி அப்கிரேடட் காா்களுக்கு நன்றாகப் பழகியதாகத் தெரிவதால், அடுத்தடுத்த பந்தயங்களிலும் அவா் வெற்றி பெற்று, நடப்பு சீசனின் சாம்பியனாகி வரலாறு படைப்பாா் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த பந்தயமான மெக்ஸிகோ சிட்டி கிராண்ட் ப்ரீ, நவம்பா் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.