தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டைத் தங்கம் வென்றார்.
இந்தியாவிலேயே அதிகளவு செஸ் கிராண்ட் மாஸ்டர்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதில் மேலும் ஒரு மகுடம் சூடப்பட்டுள்ளது.
காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் மே 16 முதல் 26ஆம் தேதிகள் வரை நடைபெற்றன. இதில் இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மாலத்தீவுகள், பாகிஸ்தான், வங்கதேசம், கென்யா, மலேசியா, சிங்கப்பூர், ஸ்காட்லாந்து, கனடா நாட்டில் இருந்து வீரர்கள் பங்கேற்றார்கள்.
கிளாசிக்கல், பிளிட்ஸ், ரேபிட் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஓபன் பிரிவில் 96 பேர் கலந்துகொண்டார்கள்.
மொத்தம் 7 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த இனியன் பன்னீர்செல்வம் 6.5 புள்ளிகள் பெற்று பிளிட்ஸ், ரேபிட் பிரிவுகளில் முதலிடம் பிடித்தார்.
மற்றுமொரு தமிழக வீரர் ஸ்ரீஹரி ரேபிட் பிரிவில் வெள்ளி வென்றார். இந்திய வீரர் மித்ரபா வெண்கலம் வென்றார்.
பிளிட்ஸ் பிரிவில் ரோஹித் கிருஷ்ணா வெள்ளியும் ஸ்ரீஹரி வெண்கலமும் வென்றார்கள்.
கிளாசிக்கல் பிரிவில் இந்திய வீரர் மித்ரபா தங்கமும், இலங்கை வீரர் இரனிந்து தில்சான் லியனகே வெள்ளியும் ஸ்ரீஹரி வெணலமும் வென்றார்கள்.
Summary
Iniyan Panneerselvam wins double gold at Commonwealth Chess Championship
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதல்வர் விஜய்!

பிரக்ஞானந்தாவால் இந்தியாவுக்குப் பெருமை: பிரதமர் மோடி, அமித் ஷா பாராட்டு!

பிரக்ஞானந்தா நம்பமுடியாத ஒரு போராளி..! கார்ல்சென் புகழாரம்!

காமன்வெல்த் செஸ்: இனியன் உள்பட தமிழக வீரா், வீராங்கனைகள் சிறப்பிடம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
