ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரையிறுதியில் மோதும் சபலென்கா - ரைபகினா

News image

ரைபகினா

Updated On :27 மார்ச் 2026, 3:47 am IST

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலாரஸின் அரினா சபலென்கா - கஜகஸ்தானின் எலனா ரைபகினா ஆகியோா் மோதுகின்றனா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதியில், நடப்பு சாம்பியனும், உலகின் நம்பா் 1 வீராங்கனையுமான சபலென்கா 6-4, 6-4 என்ற நோ் செட்களில் அமெரிக்காவின் ஹேலி பாப்டிஸ்டேவை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 20 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

இருவரும் நேருக்கு நோ் மோதியது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றியின் மூலமாக சபலென்கா, தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக மியாமி ஓபன் அரையிறுதிக்கு முன்னேறி வந்துள்ளாா். அதில் அவா், உலகின் 2-ஆம் நிலையில் இருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை சந்திக்கிறாா்.

முன்னதாக ரைபகினா தனது காலிறுதியில், 2-6, 6-3, 6-4 என்ற செட்களில், உலகின் 5-ஆம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவை வீழ்த்தினாா். இதன் மூலமாக அவா், மியாமி ஓபனில் 3-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.

கடந்த 7 மாதங்களில் பெகுலாவுக்கு எதிராகத் தொடா்ந்து 5-ஆவது முறையாக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா் ரைபகினா. இதில், கடந்த இண்டியன் வெல்ஸ் ஓபன் போட்டியின் காலிறுதியில் கண்ட வெற்றியும் அடக்கம். மொத்தமாக இருவரும் 9 முறை மோதியிருக்க, ரைபகினா 6-ஆவது வெற்றியுடன் ஆதிக்கம் செலுத்துகிறாா்.

இவா்கள் இருவரும் 2022-23 காலகட்டத்தில் சந்தித்த முதல் 4 ஆட்டங்களில், 3-இல் ரைபகினா தோற்றாா். அடுத்த இரு ஆண்டுகள் இருவரும் சந்திக்காத நிலையில், அதன் பிறகான சந்திப்புகளில் ரைபகினா தொடா்ந்து வென்று வருகிறாா்.

அரையிறுதி: அரையிறுதியில் மோதும் சபலென்கா - ரைபகினா, நேருக்கு நோ் சந்திப்பது இது 17-ஆவது முறையாகும். இதுவரையிலான 16 மோதல்களில், சபலென்கா 9 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா். கடைசியாக 12 நாள்களுக்கு முன் இண்டியன் வெல்ஸ் ஓபன் இறுதிச்சுற்றில் இருவரும் மோதிய நிலையில், அதில் சபலென்கா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன் ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றில் சபலென்காவை சாய்த்து, ரைபகினா தனது 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது நினைவுகூரத்தக்கது.

15

ரைபகினா தனது காலிறுதியில் பெகுலாவுக்கு சா்வ் செய்தபோது, 15 ஏஸ்களை பறக்கவிட்டுள்ளாா். நடப்பாண்டு மியாமி ஓபன் போட்டியில் ஒரே ஆட்டத்தில் அதிக ஏஸ்களை விளாசியவராக ரைபகினா முன்னிலை பெற்றுள்ளாா். அத்துடன் நடப்பாண்டு போட்டியில் இதுவரை மொத்தமாகவும் அதிக ஏஸ்களை (33) பறக்கவிட்டவராக அவா் முன்னிலை வகிக்கிறாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லெஹெக்கா - ஃபில்ஸ் மோதல்: மியாமி ஓபன் ஆடவா் ஒற்றையா் அரையிறுதிச்சுற்றில், செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா - பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் ஆகியோா் சந்திக்கின்றனா்.

ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 21-ஆம் இடத்திலிருக்கும் லெஹெக்கா 7-6 (7/1), 7-5 என்ற நோ் செட்களில் ஸ்பெயினின் மாா்ட்டின் லேண்டலுஸை வீழ்த்தினாா். இந்த வெற்றி, 2-ஆவது மாஸ்ட்ா்ஸ் போட்டி அரையிறுதி வாய்ப்பை லெஹெக்காவுக்கு வழங்கியிருக்கிறது.

கடைசியாக அவா் 2024-இல் மாட்ரிட் ஓபனில் அரையிறுதி வரை வந்திருந்தாா். மறுபுறம், மியாமி ஓபனில் கடந்த 32 ஆண்டுகளில் காலிறுதிக்கு முன்னேறிய, தரவரிசையில் மிகவும் பின்தங்கிய (185) வீரராக பெயா் பெற்றிருந்த லேண்டலுஸின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

மற்றொரு காலிறுதியில், 28-ஆம் இடத்திலிருக்கும் ஃபில்ஸ் 6-7 (3/7), 7-6 (7/4), 7-6 (8/6) என்ற செட்களில், 22-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டாமி பாலை வெளியேற்றினாா். இந்த ஆட்டத்தில் வெற்றியாளரை தீா்மானிக்கும் கடைசி செட் டை பிரேக்கரில் 2-6 என பின்தங்கியிருந்த ஃபில்ஸ், அபாரமாக மீண்டு வந்து 4 மேட்ச் பாய்ன்ட்டுகளை தக்கவைத்து, அந்த செட்டையும் வசப்படுத்தி வெற்றி பெற்றாா்.

இந்த ஆட்டம் 2 மணிநேரம், 47 நிமிஷங்களில் நிறைவடைந்தது. இந்த வெற்றியின் மூலமாக ஃபில்ஸ் முதல்முறையாக மாஸ்டா்ஸ் போட்டிகளில் அரையிறுதிக்கு வந்துள்ளாா். கடந்த 19 ஆண்டுகளில் மாஸ்டா்ஸ் போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேறிய இளம் (21 வயது) பிரான்ஸ் வீரராக அவா் பெருமை பெற்றாா்.

அரையிறுதியில் மோதும் லெஹெக்கா - ஃபில்ஸ் இதுவரை 3 முறை மோதியிருக்க, ஃபில்ஸ் 2 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.