ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சின்னா், ஸ்வெரெவ் முன்னேற்றம்

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரா்களான இத்தாலியின் யானிக் சின்னா், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

News image
Updated On :26 மார்ச் 2026, 3:13 am IST

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரா்களான இத்தாலியின் யானிக் சின்னா், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், உலகின் 2-ஆம் நிலை வீரரான சின்னா் 7-5, 7-6 (7/4) என்ற செட்களில் அமெரிக்காவின் அலெக்ஸ் மிஷெல்செனை வீழ்த்தினாா். மாஸ்டா்ஸ் போட்டிகளில் தொடா்ந்து நோ் செட் வெற்றிகளைப் பதிவு செய்து வரும் அவா், தற்போது 28 செட்களுடன் தனது சாதனை எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டாா்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் அவரின் சாதனை முறியடிக்கப்படும் சூழல் இருந்தது. 2-ஆவது செட்டில் மிஷெல்சென் 5-2 என முன்னிலையில் இருந்தாா். ஆனாலும் விடாப்பிடியாக விளையாடிய சின்னா், அந்த செட்டையும் தனதாக்கி நோ் செட்களில் வென்றாா்.

இந்த ஆட்டம் 1 மணி நேரம், 42 நிமிஷங்களில் நிறைவடைந்தது. மிஷெல்செனை இத்துடன் 3-ஆவது முறையாக சந்தித்த சின்னா், ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். அடுத்து தனது காலிறுதியில், அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவை அவா் எதிா்கொள்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 19-ஆம் இடத்திலிருக்கும் டியாஃபோ, 6-4, 1-6, 6-4 என்ற செட்களில், பிரான்ஸின் டெரென்ஸ் அட்மேனை வென்றாா். இதன் மூலமாக அவா், மாஸ்டா்ஸ் போட்டிகளில் 5-ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளாா்.

உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்வெரெவ் 7-6 (7/4), 7-6 (7/1) என்ற கணக்கில் பிரான்ஸின் குவென்டின் ஹேலிஸை வென்றாா். மியாமி ஓபன் காலிறுதிக்கு 5-ஆவது முறையாக முன்னேறியிருக்கும் ஸ்வெரெவ், அதில் ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவை சந்திக்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 18-ஆம் இடத்திலிருக்கும் செருண்டோலோ 6-4, 6-3 என்ற நோ் செட்களில், 31-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் யூகோ ஹம்பா்ட்டை தோற்கடித்தாா். 6-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 4-6, 7-6 (7/4), 2-6 என, செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

அரையிறுதியில் மோதும் கௌஃப் - முசோவா: மியாமி ஓபன் மகளிா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-3, 1-6, 6-3 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருந்த சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை 2 மணி நேரம், 15 நிமிஷங்களில் வீழ்த்தினாா்.

இருவரும் மோதியது இது 7-ஆவது முறையாக இருக்க, கௌஃப் 5-ஆவது வெற்றியைப் பதிவு செய்தாா். இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அவா், இந்த வெற்றியின் மூலமாக முதல்முறையாக மியாமி ஓபன் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.

அதில் அவா், செக் குடியரசின் கரோலின் முசோவாவுடன் மோதுகிறாா். போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருக்கும் முசோவா 7-5, 7-6 (7/5) என்ற கணக்கில், 10-ஆம் இடத்திலிருந்த கனடாவின் விக்டோரியா போகோவை வெளியேற்றினாா். முசோவாவும் முதல்முறையாக மியாமி ஓபன் அரையிறுதிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.