அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

வீண்போகாத ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை..! ஆட்ட நாயகன் விருது வென்ற புலம்பெயர்ந்த வீரர்!

அறிமுக உலகக் கோப்பை ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்ற புலம்பெயர்ந்த கால்பந்து வீரர் குறித்து...

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் நெஸ்டோரி இரங்குண்டா. - படம்: ஏபி

Updated On :14 ஜூன் 2026, 4:16 pm IST

கால்பந்து உலகக் கோப்பையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த வீரர்களை தனது அணியில் இணைத்த ஆஸ்திரேலியா ”கால்பந்து அனைவருக்குமானது” எனக் கூறியிருந்தது.

உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே புலம்பெயர்ந்த கால்பந்து வீரர் நெஸ்டோரி இரங்குண்டா (20 வயது) ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.

கனடாவில் நடைபெற்ற துருக்கி - ஆஸ்திரேலிய கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-0 என அபார வெற்றியைப் பெற்றது.

இந்தப் போட்டியில் தொடக்கதிலேயே 27ஆவது நிமிஷத்தில் நெஸ்டோரி இரங்குண்டா சிறப்பான கோல் அடித்தார். குறைந்த வயதில் (20 ஆண்டுகள், 125 நாள்கள்) ஆஸ்திரேலிய அணிக்காக கோல் அடித்து சாதனை படைத்த இவருக்குத்தான் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான புருண்டியில் ஏற்பட்ட சிவில் போரினால் கிகோமா என்ற தான்சானியாவின் அகதிகள் முகாமில் பிறந்த இவர் குழந்தையாக இருக்கும்போதே ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்.

அடிலெய்டு யுனைடெட் அணியில் டிஃபென்சர்களை வீழ்த்தி 16 கோல்கள் அடித்து அசத்தினார். லியோனல் மெஸ்ஸி பாணியில் விளையாடும் இவர் ஆஸி.யின் நட்சத்திர வீரராக புகழப்படுகிறார். பின்னர் ஜெர்மனியின் புகழ்பெற்ற பயர்ன் மியூனிக் அணிக்கு 2024ல் தேர்வானார்.

புலம்பெயர்ந்த வீரராக இருந்தாலும் இவரது திறமை மீது நம்பிக்கை வைத்த ஆஸ்திரேலியா அணி அவரை அணியில் இணைத்த நம்பிக்கை வீண்போகவில்லை என்பதை முதல் போட்டியிலேயே நிரூபித்துள்ளார்.

Summary

Australia immigrant player Nestory Irankunda is won the Superior Player of the Match award

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.