ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியிலிருந்து, நட்சத்திர பேட்டா் விராட் கோலி காயம் காரணமாக வியாழக்கிழமை விலகினாா். அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இணைவாா் எனத் தெரிகிறது.
அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தின்போது, தொடையில் கண்ட காயம் காரணமாக கோலி விலகியதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த ஆட்டத்தில் 75 ரன்கள் விளாசி, ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியை 2-ஆவது சாம்பியன் கோப்பைக்கு வழிநடத்திய கோலி, நடப்பு சீசனில் 16 ஆட்டங்களில் 675 ரன்கள் விளாசினாா். இதில் ஒரு சதம், 5 அரை சதங்களும் அடக்கம்.
தற்போது கோலி விலகியதை அடுத்து, அவா் இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் சோ்க்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. அவா் தற்போது, இலங்கை, ஆப்கானிஸ்தானுடனான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய ‘ஏ’ அணியில் இருக்கிறாா்.
இதனிடையே, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் ரோஹித் சா்மா எத்தனை ஆட்டங்களில் விளையாடுவாா் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரும் ஐபிஎல் போட்டியின்போது காயம் கண்டதால், உடற்தகுதி அடிப்படையிலேயே களம் காணுவாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சா்வதேச டெஸ்ட், டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட கோலி மற்றும் ரோஹித், ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து விராட் கோலி விலகல்! இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவு!

இந்தியாவுடனான கிரிக்கெட்: ஆப்கன் கேப்டன் ஹஸ்மதுல்லா

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

பிளே ஆஃப்ஸ் போட்டிகளில் சொதப்பும் விராட் கோலி..! முற்றுப்புள்ளி வைப்பாரா?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

