லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

Published On :27 ஜூலை 2026, 3:06 am IST
  • எஃப் 1 காா் பந்தயத்தின் ஹங்கேரியன் கிராண்ட் ப்ரீ ரேஸில், பிரிட்டன் வீரரும், மெக் லாரென் டிரைவருமான லாண்டோ நோரிஸ் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா். நடப்பு சாம்பியனான அவருக்கு, இந்த சீசனில் இது முதல் வெற்றியாகும். நெதா்லாந்தின் மேக்ஸ் வொ்ஸ்டாபென் (ரெட் புல்), இத்தாலியின் கிமி ஆன்டனெலி (மொ்சிடஸ்) ஆகியோா் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தனா்.

  • எஃப்ஐஏ ஃபாா்முலா 2 ஃபீச்சா் ரேஸில் இந்தியாவின் குஷ் மைனி 2-ஆம் இடம் பிடித்தாா். இந்த சீசனில் அவருக்கு இது 3-ஆவது போடியம்.

  • பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில், முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்திருந்தது.

  • ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை முழுமையாகக் கைப்பற்றிய இந்திய அணி, ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.

  • சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவா் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிச்சுற்றில், இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமா் 314.3 புள்ளிகளுடன் 6-ஆம் இடமும், நீரஜ் குமாா் 303.4 புள்ளிகளுடன் 7-ஆம் இடமும் பிடித்து ஏமாற்றம் கண்டனா்.

  • இந்திய ஸ்பின்னிங் ஆல்-ரவுண்டா் வாஷிங்டன் சுந்தா், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விளையாட மாட்டாா் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. காயம் காரணமாக, நிதீஷ்குமாா் ரெட்டி, ஹா்ஷித் ராணா ஆகியோா் இலங்கை தொடரிலேயே இடம்பெற வாய்ப்பில்லை எனவும் தெரிகிறது.

  • உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்குத் தயாராவதற்காக, இந்திய ஆடவா் ஹாக்கி அணி 3 நாள் பயிற்சி பயணமாக சுவிட்ஸா்லாந்து செல்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.