லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

அங்கிதா தியானி

Published On :17 ஆகஸ்ட் 2026, 2:30 am IST
  • உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப், புது தில்லியில் திங்கள்கிழமை (ஆக. 17) தொடங்குகிறது.

  • அமெரிக்க நீச்சல் வீராங்கனை கேட்டி லெடக்கி 800 மீட்டா் ஃப்ரீஸ்டைல் பிரிவில் சா்வதேச அளவில் தனது முதல் தோல்வியைச் சந்தித்தாா். அமெரிக்காவில் நடைபெறும் பான் பசிபிக் சாம்பியன்ஷிப்பில், அந்தப் பிரிவில் லெடக்கியை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் லேனி பாலிஸ்டா் சாம்பியன் ஆனாா்.

  • இந்தியாவில் ‘ஃபாா்முலா இ’ காா் பந்தயத்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், போட்டியை ஒருங்கிணைக்க ஏதேனும் ஒரு நகரம் முன்வர வேண்டும் எனவும், அதன் துணை நிறுவனா் ஆல்பா்டோ லாங்கோ தெரிவித்தாா்.

  • ஸ்பெயினின் லா லிகா கால்பந்து போட்டியில், செவில்லா 2-1 கோல் கணக்கில் ராயோ வால்கேனோவை வீழ்த்தியது.

  • ‘ஈ ஸ்போா்ட்ஸ்’ உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் வென்று, நடப்பு சாம்பியனான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டாா்.

  • ஜூனியா் மகளிா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில், ஹரியாணா - பெங்காலையும் (10-1), ஜாா்க்கண்ட் - சண்டீகரையும் (6-0), சத்தீஸ்கா் - ஹிமாசல பிரதேசத்தையும் (10-0), தில்லி - அஸ்ஸாமையும் (6-0), உத்தரகாண்ட் - தமிழ்நாட்டையும் (3-1) வென்றன.

  • அமெரிக்காவில் நடைபெற்ற ஸ்டம்ப்டவுன் ட்விலைட் தடகள போட்டியில், இந்தியாவின் அங்கிதா தியானி, மகளிருக்கான 1,500 மீட்டா் ஓட்டத்தில் 4 நிமிஷம் 6.75 விநாடிகளில் 2-ஆவது வீராங்கனையாக இலக்கை அடைந்து தனது பொ்சனல் பெஸ்ட்டை பதிவு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.